Tuesday, November 22, 2011

சொம்படிக்குதா தினமலர்?!!!!

அம்மாவின் கூட்டணியின்போது விஜயகாந்தை தூக்கி, தூக்கிவிட்ட தினமலர், இப்போது அவர் எதை செய்தாலும் காமெடியாகவே காட்டுகிறது. அதேநேரம் அம்மா செய்யும் அனைத்தையும், ஏதோ அருள் வாங்கிவந்ததைபோல செய்தியிடுகிறார்கள். பத்திரிகைகள் செய்வதற்கு எவ்வளவோ நல்லகாரியங்கள் உள்ளது. சொம்பை தூரபோட்டுவிட்டு அத செய்யுங்க சார்.

ஆமா...... நான் தெரியாமதான் கேக்குறேன், இன்னுமா இதையெல்லாம் ஜனங்க நம்பறாங்க? ஹையோ....., ஹையோ.



அட அப்படியா?
இன்றைய அமெரிக்காவின்  ப்ளோரிடா (Florida) மாநிலம், 1819 ல் ஸ்பெயினிடமிருந்து 5 மில்லியன் டாலர் கடனை ரத்து செய்து அமெரிக்கா வாங்கிக்கொண்டது.






நான் ரசித்த, கவிக்கோ அப்துல் ரஹ்மானின்  அருமையான ஒரு  கஜல் கவிதை

உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது,
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.


இணையத்தில் ரசித்த ஜோக்:

கணவன் மனைவியிடம்: ஏன் டார்லிங், நான் இறந்துட்டா நீ என்ன பண்ணுவ?
மனைவி: நானும் கூடவே செத்துருவேன்.
கணவன்: ஜோசியக்காரன் அப்பவே சொன்னான், நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு.

நட்புடன்,
உங்கள் நண்பன்.

No comments:

Post a Comment