முதலில் வரி உயர்வு, அடுத்து பால் மற்றும் பஸ் கட்டணம். இதுவே கொதித்து அடங்கவில்லை, அதற்குள் மின்சார கட்டணமும் இரட்டிப்பாகுமாம்.
எதை விற்றால் காசு பார்க்கலாம் என்பது வியாபாரம்!
மக்களுக்கு அத்தியாவசியமானதை மலிவாக கிடைக்க செய்ய வேண்டியது அரசாங்கம்!!
நடப்பது நன்றாக இல்லையே நாராயணா!!!
அரசியல் அவ்வளவாக தெரியாது என்றாலும், பஸ்ஸில் 4 ரூபாய் அதிகமாக கேட்டால் பகீர் என்கிறது. 60 ரூபாய் பெட்ரோல் போட்டு 15 கிலோமீட்டர் AC காரில் செல்வோருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மாதம் 300 ரூபாய் பஸ்சுக்கு என்று ஒதுக்கி வைத்து குடும்பம் நடத்துபவருக்கு?
இந்தக்கூத்தில் தென்னிந்திய தொழிற்சங்கம் வேறு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து குளிர்காய்கிறது.
மக்கள்பாடு:

மக்கள்பாடு:

குறிப்பு:- பல பதிவர்களை படித்து, நானும் எழுதலாம் என்று ஆரம்பித்துவிட்டேன். அதற்க்கு நன்றி சொல்ல நீண்ட பட்டியல் உண்டு. நான் எழுதலாம் என்பதை அறிந்து எழுதிவிட்டேன், நன்றாக எழுதுகிறேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
பிழையேதும் வந்தால், போனாபோவுது சின்னப்பையன் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க. நல்லாயிருந்தா, தட்டிக்கொடுங்க.
நட்புடன்,
No comments:
Post a Comment